தென்னகத்தில், வடகிழக்குக் காற்று நிலத்திலிருந்து கடலுக்கு வீசும் போது அதன் ஒரு பகுதி வங்காள விரிகுடாவிலிருந்து ஈரப்பதத்தை எடுத்து, மழையைத் தாங்கும் மேகங்களைக் கொண்டுவருகிறது. இது அக்டோபர் – நவம்பர் மாதங்களில் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசத்தின் தெற்குப் பகுதிகளுக்கு மழைப்பொழிவைத் தரும்.
இந்தப் பருவநிலை மாற்றம் மழையை மட்டுமல்ல… சளி காய்ச்சல்களையும் மற்ற நோய்த் தொற்றுகளையும் சேர்த்தே கொண்டுவரும். சளிக் காய்ச்சல் (ஃப்ளூ) என்பது வைரசால் உண்டாகும் ஒரு நுரையீரல் தொற்று. மக்களுக்கு வருடத்தின் எந்தக் காலப் பகுதியிலும் சளிக்காய்ச்சல் வரலாம்; ஆனால் குளிர் மற்றும் மழைக்காலத்தில் அதிகமாக இருக்கும்.
Add Comment