தேர்வுக்கூடத்தி்ல் டீச்சரிடம் பேப்பர்களை ஒப்படைக்கக் கடைசி ஐந்து நிமிடம் என்று மணி அடித்ததும் இன்னும் தீவிரமாக எழுதுவார்கள் சில மாணவர்கள். அப்படி போரில் ஒரு இடைவெளி ஒப்பந்தம் முடிவானதும் அது தொடங்கும் நேரத்துக்குச் சிலமணி நேரம் முன்பு கூட ஐநா பள்ளிக்கூட த்தின் மீது குண்டு வீசி 27 பேரைக் கொன்றது இஸ்ரேல். அக்டோபர் 7 ஆம் தேதி ஆரம்பித்த போரில் 48 நாள்களுக்குப் பிறகு நான்கு நாள் இடைவெளி கிடைத்தது.
போர் நிறுத்த ஒப்பந்தம், ஐநாவின் போர் நிறுத்தத் தீர்மானம் என்று நாம் பொத்தாம்பொதுவாக குறிப்பிட்டாலும் உண்மையில் வெவ்வேறு சொற்கள் பயன்பாட்டில் உள்ளன.
ட்ரூஸ் (truce) அல்லது செஞ்சிலுவைச் சங்கத்தின் வார்த்தைகளில் சஸ்பென்ஷன் ஆஃப் ஹாஸ்டைல்ஸ் என்பது, ரொம்ப நாளாய் நடக்கும் சண்டையில் கொஞ்சம் இடைவெளி கொடுங்கள் என்பது. காயம் பட்டவர்களுக்கு உதவி, இறந்தவர்களை அப்புறப்படுத்துவது, பணயக் கைதிகளை மீட்க போரை முற்றிலும் நிறுத்த பேரம் பேசுவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
Add Comment