2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22ஆம் தேதி அயோத்தியில் புதிதாகக் கட்டப்படும் ராமர் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, பா,ஜ,க, உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.
அயோத்தியில் இந்த ராமர் கோயில் கட்டி எழுப்பப்படுவதற்குப் பின்னால் பல வரலாற்றுச் சம்பவங்கள் இருக்கின்றன. இன்றைக்கும் டிசம்பர் 6ஆம் தேதி நாடெங்கும் பதற்றம் மிகுந்த நாளாக உணரப்படுகிறது. கரசேவை என்ற பெயரில் சங் பரிவார் அமைப்புகள் பாபர் மசூதியை இடித்த அந்த நாள் இந்திய வரலாற்றில் கறுப்பு நாளாகப் பதிவாகிப்போனது.
இந்திய நிலப்பரப்பை ஆண்ட பலரில் முகலாயர்களுக்குப் பெரும் பங்குண்டு. முகலாய அரசர்களில் ஒருவரான பாபருடைய ஆட்சியில் அயோத்தியில் கட்டப்பட்ட மசூதிக்குப் பெயர் பாபர் மசூதி.
Add Comment