திருப்பதி. பெயரைக் கேட்டாலே ஏழுமலையானுக்கு இணையாக நம் அனைவரின் நினைவுக்கும் வருவது- லட்டு. பசுநெய், முந்திரி, ஏலக்காய், கல்கண்டு, பச்சைக் கற்பூரம் உள்ளிட்டவற்றை சரியான விகிதத்தில் கலந்து மணக்க மணக்கத் தயாரிக்கப்படும் திருப்பதி லட்டுக்கு நிகர் வேறொன்றில்லை. ஒரே தரத்தில், ஒரே அளவில், சுவை மாறாமல் ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கில் தயாராகிறது.
யார் எப்படி முயன்றும் அதற்கு இணையாகவோ அல்லது அதைவிட சற்றே குறைவாகவோ சுவை கொண்ட லட்டை எவரும் எங்கும் செய்ததில்லை என உறுதியாகச் சொல்ல முடியும்- யூடியூப் சமையல் கலைஞர்களால் கூட. திருப்பதி லட்டின் சுவைக்கு நம்மை ஒப்புக்கொடுக்க பெருமாள் பக்தராக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இருந்தால் போதும். புவிசார் குறியீடு பெற்ற சிறப்பு வாய்ந்த திருப்பதி லட்டை முன் வைத்துத்தான் இப்போது ஒரு விவாதம் கிளம்பியிருக்கிறது.
லட்டு தயாரிக்கும் வேலைக்காக ஆட்களை நியமிக்கும் பணிக்கு ஒரு தனியார் நிறுவனம் ஒப்பந்தம் பெற்றுள்ளது. ஸ்ரீ லட்சுமி ஸ்ரீனிவாசா மேன் பவர் கார்ப்பரேசன் என்பது அந்த நிறுவனத்தின் பெயர். ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கில் லட்டுகளைச் செய்யும் இந்தப் பணியில் சுமார் 200 ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் இந்தப் பணிக்கான ஆறு காலியிடங்களை நிரப்ப விளம்பரமொன்றைக் கொடுத்திருந்தது அந்த நிறுவனம்.
Add Comment