Home » ஆபீஸ் – 78
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 78

78 எதிர்கொள்ளல் 2

யார் கண்னிலும் படும் முன் போய்விடவேண்டும் என்று ஜீன்ஸ் குர்தா ஜோல்னா பையுடன் விறுவிறுவென லிஃப்டை பார்க்க நடந்தவன், ‘யாரை சார் பாக்கணும்.’ என்று வழிமறிக்கப்பட்டான்.

‘இந்த டிபார்ட்மெண்ட்டுதான். எல்டிசி.’

‘அப்படியா சார். நான் யாரோ வடநாட்டு கம்பெனிக்காரர்னு நெனச்சிட்டேன். போங்க சார்’ என்று லிஃப்ட்டுக்குக் கை காட்டினான் துப்பாக்கியுடன் நின்றிருந்த பாரா டூட்டி சிப்பாய். பயனட்டை செருகி அவன் பிடித்திருந்த 303 ரைஃபிளை பார்த்து பயப்படாதவர்களையும் பயமுருத்தும்படி மீசைப் புதருக்குள் இருந்தது அவன் முகம். ‘பையன் பென்ஷன் வாங்கறாரு இந்தப் பெருசு இன்னும் வேலைல இருக்கு’ என்று கேலி செய்யப்பட்ட அல்சேஷன் ஒருவழியாக ஓய்வுபெற்றுவிட்டது போலும்.

‘டிசியை பாக்கணும்…’

‘எந்த டிசியை சார்?’

பெயரைக்கூடக் கேட்காமல், பரக்காவெட்டி போல கிளம்பி வந்துவிட்டோமே என்று வெட்கமாக இருந்தது. கேட்டால் மட்டும் டிசி பெயரை வாய்விட்டுச் சொல்லிவிட்டிருப்பாரா என்ன ஏசி. உயர் அதிகாரியின் பெயரைச் சொல்வது எங்கே அவமரியாதையாக எடுத்துக்கொள்ளப்பட்டுவிடுமோ என்று அஸ்தியில் ஜுரம் கண்டு கிடக்கிற அடிமை கும்பலல்லவா இது. அதுவும் அமினுதீன் போன்ற பயந்த சுபாவியா சொல்லிவிடப்போகிறார்.

‘பேர் தெரியில. தேனாம்பேட்டை ஆபீசுக்கு ஜீப் அனுப்பி இருந்தாங்களாம்…’

‘நீங்கதானா சார் அது. யாரோ எழுத்தாளராமே, அவுருக்கு பிரைஸ் விழுந்திருக்குதாம். உனக்குத் தெரியுமானு கேட்டுட்டு இட்டுக்கினு வரப்போன டிசி பி & வி டிரைவர் ஏகாம்பரம், ஆள் இன்னும் ஆபீஸுக்கே வரலையாம்னு சிரிச்சுக்கிட்டே திரும்பி வந்தான். மூணாவது மாடிக்குப் போ சார்.’

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!