கடைகளில் உங்களுக்கு மிகவும் தேவையாக இருக்கும் அல்லது பிடித்தமான மிக அதிக விலையுள்ள பொருள், 80 சதவீதத் தள்ளுபடியில் உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள கடையில் கிடைக்கும் என்றால் என்ன செய்வீர்கள்? எப்படியாவது வாங்கிவிடலாம் என்று நினைப்பீர்கள்தானே? அதுவும் விடுமுறை அன்று, வருடக்கடைசியில் வரும் மிக உல்லாசமான விடுமுறைக்கு அருகில், நிறுவனங்கள் ஊக்கப்பணம் வேறு தரும் நேரம்… எப்படியாவது வாங்கிவிடலாம் என்றுதானே மனம் நினைக்கும்?
மிகக்குறைந்த விலையில் சில பொருட்களையும் நடுத்தர விலையில் சிலவற்றையும் எப்போதும் விற்கும் விலையில் சிலவற்றையும் தந்து விற்பனையைக்கூட்டி மக்களைத் தங்கள் கடைகளுக்கு வரவழைப்பதே விற்பனையாளர்களின் நோக்கம்! இதில் எலக்ட்ரானிக் முதல் குழந்தைகளின் விளையாட்டுச் சாமான்கள், சமையல் உபகரணங்கள், ஆடைகள் என அனைத்தும் அடங்கும்!
புரட்டாசி சனிக்கிழமை, ஏழுமலையானை ஒரு 100 பேர்தான் தரிசிக்க முடியும். அதுவும் கதவு திறந்த அரைமணிக்குள் எனக் காத்துக் கிடக்கும் மக்கள் இடையே ஓர் அறிவிப்பு வந்தால் எப்படி ஒரு நெரிசல் வரும் என உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா?
Add Comment