“ஹலோ… ரெயின் கோட் எடுத்துட்டு வந்திருக்கியா?”
ஒரு வாரமாக தினமும் தூக்கிக்கொண்டு வந்தேன். ஒரு சொட்டு மழையில்லை. இன்றுதான் காலையில் ‘இனிமேல் எதற்கு?’ என அலமாரியில் சொருகி வைத்தேன்.
“ஏன் மழை பெய்யுதா?”
“தூறல் போடுது. அஞ்சரை மணியாச்சு, நீ இன்னும் கிளம்பலையா? கோட் வச்சிருக்கியா இல்லையா?”
கொண்டுவரவில்லை என்றால் திட்டுவான். ‘ஐ லைனர், க்ளிப்பு, தோடுன்னு என்னென்னவோ எடுத்துட்டுப் போற… அவசியமான ரெயின் கோட்டு உனக்கு வெயிட்டா தெரியுது’ என நக்கலடிப்பான்.
“இல்லை… இன்னிக்கு உங்களோட வரட்டுமா?”
Add Comment