பென்சில்வேனியாவில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து அமெரிக்காவின் செனெட்டராக தேர்ந்தெடுக்கப்பட்ட பைடனுக்கு இரண்டு சிறப்புத் தகுதிகள் உண்டு. அமெரிக்க செனெட்டர்களிலேயே மிகக் குறைந்த வயதில் (29) தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதும், அமெரிக்க அதிபர்களிலேயே மிக அதிக வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதும். செனெட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவர் மனைவி, மகள் இருவரும் ஒரு வாகன விபத்தில் இறந்தனர். பிள்ளைகள் இருவரும் (Beau, Hunter) படுகாயம் அடைந்தனர். தினமும் புகை வண்டியில் வாஷிங்டன் வந்து கொண்டிருப்பார். அதன்பின் ஜில் ஜேகப்சை (Jill Jacobs) திருமணம் செய்து கொண்டார். அவர் மனைவி கல்வித்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.
அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் எப்போதுமே ஆட்சியில் இருக்கும் கட்சியின் வேட்பாளர், இரண்டு முறை அதாவது 8 ஆண்டுகள் தொடர்ந்து அதிபராகப் பதவி வகிக்கவில்லை என்றால் அவரே மீண்டும் அதிபர் தேர்தலில் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார். அதிபராக இங்கே இரண்டு பதவிக்காலம்தான் இருக்க முடியும். அதாவது எட்டு வருடம்.
Add Comment