ஆண்டறிக்கையில் வெளியிட்டபடி நாம் எழுத இருக்கும் தேர்விற்கு அந்த மாதத்தில் அறிவிப்பு வருகிறதாவென காத்திருக்க வேண்டும். அறிவிப்புத்தான் கல்வித்தகுதி, சிலபஸ், எந்தெந்த பாடத்திற்கு எத்தனை மதிப்பெண்கள், தேர்வுத் தேதி நேரம் இன்னும் என்னென்ன சந்தேகங்கள் உள்ளதோ அத்தனைக்கும் வழிகாட்டியாய் இருக்கும். இது தீர்க்காத புதிய சந்தேகம் வருகிறதெனில் கூகுளைத் தட்டினால் TNPSC Toll Free எண் கிடைக்கும். அந்த எண்ணிற்கு அலுவலக நேரத்தில் தொடர்புகொண்டால் நம் சந்தேகங்களுக்குப் பதில் சொல்வார்கள்.
முதன்முதலாக தேர்வெழுதுபவர்கள் ஒன்டைம் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். அப்போது நமக்கென ஒரு ஐடியும் பாஸ்வேர்ட்டும் கிடைக்கும். அதை வைத்துத்தான் நாம் விரும்பும் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியும்.
நாமே வீட்டில் கணினியில் விண்ணப்பிக்கும் போது சந்தேகங்கள் வரும். எனவே ஏற்கனவே செய்து அனுபவமுள்ள நண்பர்கள் அருகில் இருந்தால் நல்லது. அல்லது இங்கு TNPSC-க்கு விண்ணப்பிக்கப்படும் என்று பருவகாலப் பலகைகள் பிரௌசிங் சென்டர் வாசல்களில் தொங்கும். அங்கு சென்று விண்ணப்பித்துக் கொள்வது உத்தமம்.
Add Comment