1947 பிரிவினையின் போது இந்தியா- பாகிஸ்தான் இரு பக்கமும் சேரமாட்டேன் என்று முரண்டு பிடித்து வந்தார் மன்னர் ஹரிசிங். ஒரு புறம் இந்தியா, மன்னருக்கு நல்லது கெட்டதுகளை எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, பக்கவாட்டில் பாகிஸ்தான் படைகளோடு எல்லை தாண்டியது. காஷ்மீரைக் கைப்பற்றுவதற்காக முன்னேறிக் கொண்டிருந்தது.
கிட்டத்தட்ட ஸ்ரீநகர் அவர்கள் வசம் விழும் சமயம்… இதற்குமேல் இந்தியாவின் உதவிதான் காஷ்மீரைக் காக்கும் என்று மன்னர் புரிந்துகொண்டார் . இந்தியா உதவத் தயாராக இருந்தது- ஆனால் அது காஷ்மீர் தன்னுடன் சேர்ந்த பிறகே என்ற நிபந்தனையோடு. அவசர அவசரமாக ஒப்பந்தங்கள் தயாரானது. அதையொட்டி, இணைப்பை இனிமையாக்க உருவானது தான் சட்டப்பிரிவு 370.
Add Comment