இந்தியா இன்னொரு நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கப் போகும் மிக முக்கியமான வருடத்தை வரவேற்கக் காத்திருக்கிறது. உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட முதல் நாடென்ற அந்தஸ்தைப் பெற்றுத் தந்த 2023ஆம் வருடத்தில் தேசிய அளவில் நடந்த மிக முக்கிய நிகழ்வுகளைச் சற்று திரும்பிப் பார்ப்போம்.
சட்டமன்றத் தேர்தல்கள்
2023-ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தல்கள் வட கிழக்கு எல்லையிலிருந்து தொடங்கின. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களுக்குமான தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதாவிற்கு வலுவான வெற்றியைப் பெற்றுத்தந்தன.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் நடந்த தேர்தல் முடிவில் முதல் மூன்று மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றியது. தெலங்கானா தனி மாநிலமாக உருவான பிறகு காங்கிரஸ் கட்சி முதன்முறையாக ஆட்சியமைத்தது. மிசோரம் மாநிலத்தில் சோரம் மக்கள் இயக்கம் 27 தொகுதிகளில் வென்று ஆட்சியமைத்தது.
Add Comment