இந்த வருடத்தில் செய்த முதல் உருப்படியான விஷயம், எழுத்துப் பயிற்சி வகுப்பில் சேர்ந்தது. பதினாறு மணிநேர வகுப்பின் முடிவில் மெட்ராஸ் பேப்பரில் எழுதுவதற்காக ஒரு அசைன்மெண்ட் தரப்பட்டது. நன்றாக இருந்த நான்கு கட்டுரைகளை மட்டும் தேர்ந்தெடுத்து
பேப்பரில் போட்டார் ஆசிரியர். அதில் என்னுடைய ‘அரபிக் கடலும் அருளும் பொருளும்’ கட்டுரையும் ஒன்று.
முழ நீளத்திலிருந்த முதல் பாராவைத் தட்டிக் குறைத்து, பல்லை உடைக்கும் பழைய பதங்களை நீக்கி, சந்திப் பிழைகளைக் களைந்து, பொருத்தமாகத் தலைப்பையும் மாற்றி வெளியிடப்பட்டிருந்த கட்டுரை படிப்பதற்கு எளிதாகவும் பண்பட்டதாகவும் இருந்தது. அடுத்து நான் எழுதியது அண்ணாநகரில் புதிதாகத் திறந்திருந்த டவர் கோபுரத்தைப் பற்றிய கட்டுரை. ‘எழுதுவதற்கு முன்னர் கண்டிப்பாக அங்கே போய் மேல ஏறிப் பார்த்துவிட்டு வாருங்கள்’ என்றார் ஆசிரியர். அதற்குப் பிறகு நான் சென்று வந்த கோயில்களைப் பற்றி எழுத ஆரம்பித்தேன்.
Add Comment