நட்சத்திரப் பொய்கள்
“உன் நல்லதுக்குத்தான்டா சொல்றேன்…” இப்படி யார் சொன்னாலும் இஸ்மாயிலுக்குப் பிடிக்காது. அவனுக்குப் பிடித்ததை மட்டும்தான் செய்வான். அவனைச் சொல்லிக் குற்றமில்லை. அவன் வயது அப்படி. இந்த வருடம் பி.காம் படிப்பு முடிகிறது.
வழக்கம்போல் இன்றும் அப்பாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டான். தன் பிறந்த நாளுக்கு நண்பர்களுடன் சுற்றுலாச் செல்ல அவரிடம் பணம் கேட்டான். அத்தோடு நிறுத்தியிருக்கலாம். காரை எடுத்துச் செல்லப் போவதாகச் சொன்னான். கோபத்தில் கத்த ஆரம்பித்தவர், இறுதியாக “உன் நல்லதுக்குத் தான்டா சொல்றேன்” என்று முடித்தார்.
எரிச்சலான இஸ்மாயில், சட்டென வீட்டிலிருந்து கிளம்பினான். பைக்கில் கல்லூரிக்குக் போகும் வழியெங்கும், அப்பா சொன்ன வார்த்தைகள் அவன் காதுகளில் திரும்பத் திரும்ப ஒலித்தன. தான் விரும்பியதைச் செய்யக் காசு தேவைப்படுகிறது. அதற்காக அவரிடம் ஏங்கி நிற்க வேண்டியிருக்கிறது. அதனால்தானே இந்தப் பிரச்னை? கூடிய சீக்கிரம், தானே பணம் சம்பாதிக்கக் கற்று கொண்டுவிட்டால் இந்தத் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.
Add Comment