ஐ.என்.எஸ். கொல்கத்தா, ஐ.என்.எஸ். மொர்மகோவா, ஐ.என்.எஸ். கொச்சி, ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம், ஐ.என்.எஸ். சென்னை கப்பல்களைச் செங்கடல் பகுதிக்கு அருகில் அனுப்பியுள்ளது இந்தியா. போயிங்8-பிஐ மல்டிமிஷன் வானூர்திகளும் தயார் நிலையில் உள்ளன. இஸ்ரேல் காஸாவின் மீது நடத்தும் போர் வெவ்வேறு வகையில் மற்ற நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்கிறது. செங்கடல் பகுதியின் பதற்றத்தை இந்தியாவும் உணர்ந்தது. சமீபத்தில் குஜராத் அருகே உள்ள கடல் பகுதியில் ஒரு கப்பல் ஹூதி அமைப்பினால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய அரசு இந்நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 20 இந்தியர்கள் இக்கப்பலில் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.
மிசைல் தாக்குதலை எதிர்கொண்டதுமே கப்பலில் இருந்தவர்கள், ஆபத்துச் செய்தியை எல்லா இடங்களுக்கும் அனுப்பினர். சர்வதேசக் கடல் பாதுகாப்பில் இந்த இடம் இந்தியாவின் கண்காணிப்பின் கீழ் உள்ள இடம். சவுதியில் இருந்து மங்களூரு சென்று கொண்டிருந்த இக்கப்பல் இஸ்ரேல் உடன் தொடர்புடையது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இஸ்ரேல் கப்பல்கள் இல்லையெனினும் தாக்குதல் நடத்துகிறார்கள் என்று குறிப்பிட்டார். கப்பல் கம்பெனி, சரக்குகள் முதல் இஸ்ரேல் அருகில் கப்பல் நின்று சென்றாலும் கூட தாக்குதல் இலக்காகக் கருதுகிறது ஹூதி. இஸ்ரேல் என்கிற வார்த்தை கப்பல் தொடர்பாக எங்கு இருந்தாலும் எல்லாமே இஸ்ரேல் லிங்க்ட். வணிகக் கப்பல், போர்க்கப்பல், பயணக் கப்பல் என்றெல்லாம் பார்க்காமல் காஸா மக்களுக்கு மருந்தும் உணவும் கிடைக்கும் வரை அப்படித்தான் செய்வோம் என்கிறது ஹூதி. அமெரிக்கா இதே நாளில் நான்கு இன்டர்செப்டர் ஏவுகணை அனுப்பி யேமனின் ஹூதி அனுப்பிய ஏவுகணைகளைத் தடுத்ததாகவும் சொல்லியது. இந்தியாவில் இருந்தும் ஐ.சி.ஐ.எஸ். விக்ரம் கப்பல் உடனடியாக ஏவுணைத் தாக்குதலுக்குள்ளான கப்பலுக்கு உதவிக்குச் சென்றது. 20 இந்தியர்கள் உட்பட கப்பலில் இருந்த அனைவரது பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டது.
Add Comment