அத்தனைக்கும் ஆசைப்படாதீர்கள்
“ஹலோ… ஹலோ… கேக்குதுங்களா…” என்றவாறே அவசர அவசரமாய் வீட்டை விட்டு வெளியே வந்தார் ரகுநாதன். எப்போது ஃபோன் வந்தாலும் இதே ஓட்டம்தான். அவர் வீட்டிற்குள் மொபைல் சிக்னல்கள், “வரும்… ஆனால் வராது…” என்று கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தன.
ரப்பர் ஸ்டாம்ப்கள் செய்து கொடுக்கும் கடை வைத்திருந்தார் ரகுநாதன். வருமானம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அவரது மகனுக்கு வங்கியில் வேலை கிடைத்து ஒரு வருடம் ஆகிறது.
“கடையில ஏம்ப்பா கஷ்டப்படற…? இவ்வளவு நாள் சிரமப்பட்டுட்ட… இனியாவது ரிலாக்ஸா இருக்கலாமேப்பா…” என்று மகன் எவ்வளவோ சொல்லியும் முடியவே முடியாது என்று மறுத்துவிட்டார் ரகுநாதன். தன் கடைமீது அவ்வளவு ப்ரியம். அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் இருபத்தேழு வருடங்களாகப் படியளக்கும் சாமியல்லவா?
Add Comment