அமெரிக்கா, ஆஸ்த்ரேலியா, பிரிட்டன், கனடா, ஜெர்மன், இத்தாலி, டென்மார்க், பெல்ஜியம், ஜப்பான், நெதர்லாந்து, நியூசிலாந்து, பஹ்ரைன்… இந்தப் பன்னிரெண்டு நாடுகள் இணைந்த கூட்டமைப்பு செங்கடல் பகுதியில் ஹூதி அமைப்பு தாக்குதலை உடனே நிறுத்தவேண்டும் என்று கடுமையாக எச்சரித்தது.
முன்னதாக வர்த்தகக் கப்பல் ஒன்று செங்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஹூதி அமைப்பினர் நான்கு சிறு படகுகளில் தாக்குதல் நடத்த வருவதாக அபாய அறிவிப்பு கொடுத்து உதவி கோரினர். அமெரிக்கப் படையானது விரைந்து வந்து தாக்குதல் நடத்தி மூன்று படகுகளை மூழ்கடித்தது. துப்பாக்கிச் சூடும் நடந்தது. பத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர். ஒரு படகு மட்டும் தப்பிவிட்டது. இந்த நிகழ்வுக்குப் பிறகு கடைசி எச்சரிக்கை என்று அறிக்கை வெளியிட்டது சர்வதேச நாடுகள் கூட்டமைப்பு.
மிகத் தீவிரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். நேரடித் தாக்குதல்களை ஹூதி அமைப்பு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற வலிமையான எச்சரிக்கைக்குப் பதில் சொல்லும் விதமாக மேலும் சில ஏவுகணைகளை ஹூதி அமைப்பு அனுப்பியது. செங்கடல் பகுதியில் தாக்குதல்கள் அதிகரிக்கும் என்பதே இப்போதைய நிலவரம்.
Add Comment