நாற்பத்தேழு ஆண்டுகளாகச் சென்னை புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. பபாசி என்கிற தனியார் அமைப்பு (தென்னிந்திய பதிப்பாளர்கள்-விற்பனையாளர்களின் கூட்டமைப்பு) நடத்தும் இந்தப் புத்தகக் காட்சி, ஆண்டுக்கொரு முறை ஜனவரி மாதத்தில் நடைபெறும். சென்னையின் மிகப்பெரிய கலாசார-பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆண்டுதோறும் இதற்கு வருவோர் எண்ணிக்கை லட்சக் கணக்கில் உயர்ந்துகொண்டே செல்வதாக அவர்களே சொல்வார்கள். சென்னை மட்டுமல்ல. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சென்னை புத்தகக் காட்சிக்கு வந்து செல்வதை ஒரு கடமையாகக் கொண்டோர் மிகப் பலர். இதர தென் மாநிலங்களில் இருந்தும் சொற்ப எண்ணிக்கையில் தமிழ் வாசகர்கள் வருவதும் வருடம்தோறும் நிகழ்வதுதான்.
இவ்வளவு பெரிய கலாசார நிகழ்வு அதற்குரிய நியாயமான கட்டமைப்புடன் ஒருங்கிணைக்கப்படுகிறதா என்றால், மிக நிச்சயமாகக் கிடையாது. சென்னை புத்தகக் காட்சி நடைபெறத் தொடங்கிய நாளாகக் கழிப்பறை வசதி சரியில்லை, நடைபாதைகள் சரியில்லை, போதிய குடிநீர் வசதி இல்லை, மின் விளக்குகள், மின் விசிறிகள் போதுமான அளவுக்கு இல்லை, இணையத் தொடர்பு சரியாக இல்லை, கடன் அட்டைகள் தேய்க்க முடிவதில்லை என்று தொடங்கி, குறைந்தது நூறு புகார்களாவது ஒவ்வோர் ஆண்டும் எழும். ஆனால் எதுவும் சரி செய்யப்படாது. வாசகர்களும் புதிய புத்தகங்களைக் கண்டு, வாங்கி, வாசிக்கும் ஆர்வத்தில் இவற்றைப் பொருட்டாகக் கருதாமல் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் சிறிது புலம்பிவிட்டு நகர்ந்துவிடுவார்கள். இது எப்போதும் நடப்பது.
இந்த வருடம் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கிய புத்தகக் காட்சி, தனது குணவிசேடமான குளறுபடிகளில் புதிய உச்சம் கண்டது.
#BAPASIfails வைரல் ஆக்க வேண்டிய நேரமிது. பொறுப்பில் உள்ளவர்களுக்கு உறைக்க வேண்டும்