புத்தாண்டுக் கொண்டாட்டம் முடிவடைந்துவிட்டது. அடுத்த வருடம் எப்படி இருக்கும் என்று ஆரூடம் பார்க்கத் தொடங்கியிருக்கிறோம். அலுவலக அப்ரைசல்கள் தொடங்கிவிட்டன. கையோடு, கடந்த வருடம் முழுக்க உற்சாகத்தையும், கவலைகளையும் ஒருசேரக் கொடுத்துக்கொண்டிருந்த செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிகள் வரும் ஆண்டில் என்னென்ன செய்யக் காத்துக்கொண்டிருக்கிறது என்று ஆய்வுகள் சொல்வதையும் அலசிவிடுவோம்.
வரும் நூற்றாண்டுகளில், செயற்கை நுண்ணறிவின் வரலாற்றைப் பற்றி யாரேனும் எழுதினால் 2023-ஐ மிகக் குறிப்பிடத்தக்க வருடமாகக் குறிப்பார்கள் என்பதில் ஐயமேதுமில்லை. ஏகப்பட்ட ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள், ஓப்பன் ஏஐ, கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் யாவுமே தங்களின் செயலிகள், திட்டங்கள் யாவற்றையும் செயற்கை நுண்ணறிவு ஆய்வின் பக்கமாகத் திருப்பி விட்டன என கிடுகிடுவென பல்லாயிரம் படிகளை ஏறிவந்துவிட்டது ஏ ஐ. அடுத்த வருடம் இதன் மீதான எதிர்பார்ப்புகள் என்னென்ன, இன்னும் மிச்சக் கவலைகளை ஏதேனும் தொகுத்து வைத்திருக்கிறதா என்று பார்க்கலாம்.
கீழ்க்கண்ட தலைப்பில்தான் வரும் வருடத்தின் செயற்கை நுண்ணறிவு சார்ந்த எதிர்பார்ப்புகளும் கவலைகளும் ஒன்று சேரும் முனையாக இருக்கிறது என்கிறார்கள் ஆர்வலர்கள்.
Add Comment