Home » வாசிப்பும் நம்பிக்கையும்
புத்தகக் காட்சி

வாசிப்பும் நம்பிக்கையும்

சிவப்புநிறக் கிரீடங்களில் நாளைய ராஜா ராணிகள் பெருமிதத்தோடு வலம் வந்து கொண்டிருந்தனர். காகிதக் கிரீடமென்பதால் ராஜாவுக்கும், ராணிக்கும் வித்தியாசமில்லா கிரீடம் சாத்தியமானது. காகிதத்தில் எழுத்துகளைத் தாங்கிய புத்தகங்களும் இதை நடைமுறையில் கொணரும் வலிமைபெற்றவை. ஒருவேளை இதுவும் ஒரு குறியீடோ என்ற எண்ணத்தோடேயே சென்னைப் புத்தகக் காட்சிக்குள் நுழைந்தோம்.

கதைகளின் மூலம் கனவுகாணும் குழந்தைகள், தேடியவை சாகசக் கதைகளே. மார்வெல் நாயகர்கள், தேவதைகள், இளவரசிகள் – யாராக இருப்பினும் அவர்களையும், கதைக் களத்தையும், கண்ணைக் கவரும் வண்ண ஓவியங்களோடு கதைப் புத்தகத்தில் வரைந்திருப்பது அவசியம். புத்திமதி சொன்னாலும், பேயைக் கொண்டு பயமுறுத்தினாலும் படங்கள் முக்கியம். வரைதல் அல்லது கதை சொல்லுதலில் ஆர்வமுள்ள குழந்தைகள், இத்தகைய சாகசப் புத்தகங்கள் எழுதி, வரைவதையே எதிர்கால இலக்காகக் கொண்டுள்ளனர்.

இவ்வகைக் கதைகளோடு ஆங்கிலப் புத்தகங்களே ஏராளமாக உள்ளன. பிரபலமாகவும் இருக்கின்றன. தமிழ் மொழிபெயர்ப்புகளும் நேரடித் தமிழ்ப் புத்தகங்களும் இப்போதுதான் பேசப்படுகின்றன. குழந்தைகளுக்கான பாலியல் வன்முறையைக் கையாளும் கதைகள், கணிதத்தைச் சீட்டுக்கட்டில் கற்றுக்கொள்ளும் எளிமை எனத் தமிழிலும் பலவகைப் புத்தகங்கள் வந்துள்ளன. இவற்றைப் பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் அறிமுகப்படுத்த புத்தக அரங்கில் விற்பனை செய்வோரின் உதவி பெரிதும் தேவைப்படுகிறது. இவற்றுக்குப் போதிய பரப்புரையும் தேவைப்படுகிறது. காலப்போக்கில் ஆங்கிலப் புத்தகங்களின் எண்ணிக்கைக்கு நிகராக, தமிழ்ப் புத்தகங்களும் உருவாகிவிடும் நம்பிக்கை உண்டாகிறது.

குழந்தைகளின் கனவுகளை ஓரங்கட்டும் பெற்றோரின் கனவெல்லாம், பள்ளி மதிப்பெண்களோடேயே முடிந்து விடுகிறது. கணிதப் புதிர்கள், ஆங்கிலக் கட்டுரைகள், வரைபடங்கள், விளக்கப் படங்கள் எனப் பள்ளி சார்ந்தே அவர்களது புத்தகத்தேர்வு இருக்கிறது. வேதியியல் பாடத்தின் தனிம வரிசை அட்டவணையைக் கையில் சுமந்து சுற்றிவந்த குழந்தையைப் பார்க்கையில், பாரதியின் நெஞ்சும் பொறுக்காது. பாடப் புத்தகங்களுக்கு வெளியே, உலக அறிவை வளர்த்துக் கொள்வதற்குப் புத்தகங்கள் தேவைப்பட்டது அந்தக்காலம். பாடத்தில் இன்னும் சிறந்து விளங்க, கூடுதல் பயிற்சி கொடுக்கவே இப்போது புத்தகங்கள் தேவைப்படுகின்றன. வண்ணம் தீட்டும் புத்தகம் வாயிலாக, பல்வேறு கடவுள்கள், கலைகள், உடைகள், திருவிழாக்கள் என அறிமுகப்படுத்த நினைப்போர் ஒருசில குழந்தைகளைக் காப்பாற்றுகின்றனர். கண்கவர் கதைப் புத்தககங்களை வாங்கித்தரும் பெற்றோர்களில் ஒருசிலரே மிச்சம் இருக்கின்றனர்.

உலகைச் சுற்றும் ஆசையில், உலக உருண்டையைச் சுற்றிப்பார்த்து விளையாடும் குழந்தைகளின் நிலையானது பார்க்கப் பரிதாபமாகவே உள்ளது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!