முற்றிலும் அறியப்படாத, புதியதொரு குண்டைத் தூக்கி ஒன்றும் ஜப்பான் மீது எறியவில்லை அமெரிக்கா. தெரிந்தேதான் செய்தார்கள் அந்தப் பயங்கரத்தை. முதலில், ஓர் அணுகுண்டைத் தயார் செய்தார்கள். அது எப்படி வெடிக்கும், எத்தனை சேதம் தரும் என்றெல்லாம் அப்போது சரியாகத் தெரிந்திருக்கவில்லை. ‘ட்ரினிட்டி’ என்கிற அந்த (வரலாற்றின்) முதலாவது அணுகுண்டை, பாரியதொரு வெளியில் பரிசோதித்தார்கள். அப்போதே புரிந்து விட்டது. அது சீறிப்பாய்ந்த அந்தக் கணமே அதன் பொல்லாத முகத்தைத் துல்லியமாகத் தெரிந்து கொண்டது அமெரிக்க உயர்பீடம். அதன் பிறகுதான் ஜப்பானைத் தாக்குவதற்கு அதுதான் சரி என்று தீர்மானித்ததே.
டிரினிட்டியிலும் பன்மடங்கு எடை கூடிய புதிய குண்டைத் தயாரித்து, ‘லிட்டில் பாய்’ என்று செல்லமாகப் பெயர் சூட்டி, பவ்யமாக எடுத்துச் சென்று, ஹிரோசிமா நகரின் மீது சரியாக நின்று கீழே போட்டார்கள். போட்டவர்கள் விர்ரென்று அவ்விடத்தை விட்டு அகன்று செல்வதற்கும், குண்டு, கீழே விழுந்து சொடுக்கப்படுவதற்கும் நேரம் சரியாக அமையும் வண்ணம் கணித்து, அந்தக் கொடூரத்தை நிகழ்த்தினார்கள். மொத்த உலகமும் மிரண்டு போனதை ரசித்தவாறே ‘ நாகசாகி|யையும் அழித்தார்கள். இத்தனைக்கும் பிறகு, நமக்கெல்லாம் அமெரிக்கா மீது ஒரு தீராத வெறுப்பு வரும் இல்லையா?
எப்படியோ, அதுவரை அடம்பிடித்து வந்த ஜப்பான், 1945-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் பதினான்காம் திகதி முற்றாகச் சரணடைந்தது.
Add Comment