“பிரிட்டனில் பல ஏழைக் குழந்தைகள் சிறுவயதில் புத்தகம் கிடைக்காததால், வாழ்நாள் முழுவதற்கான வாசிப்பின்பம் கிடைக்காமல் தவறவிடுகின்றனர்.” என்று கவலைப்பட்டிருக்கிறார் புகழ்பெற்ற குழந்தைகள் எழுத்தாளர் மைக்கேல் மார்பர்கோ. (Michael Morpurgo)
எண்பது வயதான மைக்கேல், கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் குழந்தை எழுத்துக்காக விருது பெற்ற எழுத்தாளர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ஒரு திறந்த மடலை அனுப்பியிருக்கிறார். அதில் ‘அரசாங்கம் குழந்தைகளின் புத்தக வாசிப்பிற்காக நீண்டகால முதலீட்டைச் சீக்கிரமாகச் செய்ய வேண்டும்’ என்று கேட்டிருக்கிறார்.
ஏழு வயதிற்கு உட்பட்ட பிள்ளைகள் அந்த வயதிற்குள் படிக்கும் புத்தகங்களும், வாசிப்புப் பழக்கமும்தான் செறிவான மொழியறிவிற்கு வலுவான அடித்தளம் அமைக்கும். நல்ல புத்தகங்களைப் படிக்கும் பிள்ளைகள் பெற்றோருடனும் உற்றாருடனும் நல்லுறவைப் பேணும் பண்புள்ளவர்களாக இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
good one gayathri