பளிங்கு போன்ற நீலப்பச்சை நீர், தூய வெள்ளை மணற்பரப்பு, தென்னை மரங்கள் தலை சாய்ந்து பார்க்கும் கடற்கரை – இவைதாம் கல்பேனித் தீவின் அடையாங்கள். சென்ற ஆண்டு டிசம்பரில் அங்கு சென்றார் மோடி. அரபிக்கடலின் விளிம்பில், நாற்காலி போட்டு அமர்ந்து யோசித்தார், கருப்பு உடையில் வெள்ளை மணலில் கால் புதைய நடந்தார், ஆரஞ்சு வண்ண லைஃப் ஜாக்கெட் போட்டு கடலுக்குள் இறங்கினார். இந்தப் புகைப்படங்களெல்லாம் உடனுக்குடன் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியது.
“விதவிதமான கடலைத் தேடி உலகெங்கும் செல்பவர்கள், அதன் அழகில் மயங்குபவர்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன்… ஒரு முறை, ஒரேயொரு முறை லட்சத்தீவிற்கு வாருங்கள்!” என்று அவர் பேசிய வீடியோவும் பெருமளவில் பகிரப்பட்டது. அக்ஷய் குமார், சல்மான் கான் போன்ற ஹிந்தி நடிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் மோடிக்கு ஆதரவாக லட்சத்தீவை விளம்பரப்படுத்தினர்.
‘இந்தியத் தீபகற்பத்தின் தென்மேற்குப் பகுதியில் அரேபியக் கடலில் அமைந்திருக்கும் தீவுக் கூட்டத்திற்கு லட்சத் தீவுகள் என்று பெயர். இது எட்டு யூனியன் பிரதேசங்களுள் ஒன்று.’ என்று பள்ளியில் படித்திருப்போம். ‘சுற்றுலாப் பகுதி’ என இதற்கு முன்னர் பெரிதாக அறியப்படாதிருந்த இத்தீவுக்கூட்டம், திடீரென தற்போது லைம் லைட்டிற்கு வந்திருக்கிறது. தங்கள் தளத்தில் இதைத் தேடுபவர்களின் எண்ணிக்கை 3400% அதிகரித்திருப்பதாக தெரிவித்திருக்கிறது ‘மேக் மை ட்ரிப்.’
நீங்களும் மோடியைத் திட்டியாச்சா..ராமரை துணைக்கழைத்து..
ஜெய் ஶ்ரீ ராம்..
லட்சத்தீவு போக வேண்டிய தூரம் அதிகம் தான். ஆனால் முதல் அடி எடுத்து வைத்துள்ளார்கள் என்பது உண்மை