கடந்த ஜனவரி பதினெட்டாம் தேதி இரான் மீது பாகிஸ்தான் தாக்குதல் என்ற செய்தி வந்து, நாமெல்லாம் சிறிது வியப்புடன் அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தோம். பொதுவாகப் பாகிஸ்தான் தாக்குவதென்றால் நம் பக்கம்தானே திரும்பும், இதென்ன புதிதாக இரானுடன் மோதுகிறது என்று வியந்தோம்.
வியப்புக்கு இன்னொரு காரணம், இப்போது ஒரு போர் தொடங்கும் அளவுக்குப் பாகிஸ்தான் வளமாகவும் வெட்டியாகவும் இருக்கிறதா என்பது. அதுவும் இப்போது அங்கே இருப்பது ஒரு தாற்காலிக ஆட்சி. தாற்காலிகப் பிரதமர். நிதி நெருக்கடியோ, இலங்கைக்குச் சவால் விடும் அளவுக்கு மோசம். உதவிகளுக்காகக் கிட்டத்தட்ட சீனாவின் ஏகபோகக் குத்தகைப் பிரதேசமாகவே ஆகிக்கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு எப்போது வேண்டுமானாலும் ராணுவமும் உளவுத் துறையும் கைகோத்துக்கொண்டு பழைய குருடியின் கதவைத் திறந்துவிடும் சாத்தியங்கள் உள்ளதென்பது உலகுக்கே தெரியும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இரானுடன் போரா? என்ன அவசியம் அல்லது அவசரம்?
என்றால், காரணம் பலூசிஸ்தான்.
இந்தியாவுக்கு முன்னர் காஷ்மீர் போல பாகிஸ்தானுக்கு இப்போது வரை பலூ. ஒரே ஒரு வித்தியாசம் உண்டு. நமது காஷ்மீரின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் பாகிஸ்தான் காரணம் என்றால் பாகிஸ்தானில் இருக்கும் பலூசிஸ்தானின் பிரச்னைகளுக்கும் பாகிஸ்தானேதான் காரணம்.
Add Comment