நட்சத்திரத்திற்குப் பின் நாநூற்றொன்று
அருணாவின் ஃபோன் மௌன விரதம். இரண்டு நாள்களாயிற்று…. அவளுக்கு எந்த அழைப்பும் வரவில்லை. ஒரு மிஸ்டு கால்கூட இல்லை. இவ்வாறிருப்பதையே அவள் கவனிக்கவில்லை. அருணா அப்படித்தான்.
டாக்டருக்காகக் காத்திருந்தாள். அந்த க்ளீனிக்கின் வெயிட்டிங் ஹாலில் அவள் மட்டுமே இருந்தாள். அவளது ஃபோனைப் போலவே அந்த அறையிலும் அமைதி. இது போதாதென்று, ‘உஷ்ஷ்…’ என்று உதட்டில் விரல் வைத்து அமைதிச் சின்னம் காட்டியது சுவரில் இருந்த குழந்தைப் படம். அழகான குழந்தை.
அமைதியின் கனத்தை இன்னும் அதிகரித்தது காற்றில் நிரம்பியிருந்த பீட்டாடின் வாசம். அவளுக்கு ஹாஸ்பிடல் வாசம் என்றாலே அலர்ஜி. டாக்டர் சீக்கிரமே வந்துவிட்டால் இந்த வாசத்திலிருந்து தப்பி விடலாமெனத் தோன்றியது.
Add Comment