சிலரது படைப்பூக்கம் எப்போது, எப்படி, என்ன விதமாகப் பொங்கும் என்று சொல்லவே முடியாது. இந்த, பால் பொங்குவது – இட்லி மாவு பொங்குவது போலப் பொங்கினால் சமாளித்துவிட முடியும். வேதியல் ஆய்வகத்தில் ப்யூரெட்டிலும் பிப்பெட்டிலும் தவறாக காக்டெய்ல் செய்த அமிலங்கள் பொங்குவது போல காடா நெடியுடன் பொங்கினால்தான் பேஜார்.
ஒரு மாதர் குல மாணிக்கம். பெயர் அவ்வளவு முக்கியமா? மாமியார், நாத்தனார் போல உங்களுக்கு யார் ஆகாதோ அவர் பெயரை நினைத்துக்கொள்ளுங்கள், போதும். மூன்று மாதங்களுக்கு முன்னர் அந்த மாணிக்கம் எங்கள் பள்ளிக்கூடத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தது.
மிக அருமையானப் பதிவு. வயிறு குலுங்க குலுங்கச் சிரித்தேன். அந்த ஆசிரியை இந்தப் பதிவை பார்க்க மாட்டார் என்ற துணிவில் இதை எழுதியிருக்கிறீர்கள் என நம்புகிறேன்