எல்லாவற்றையும் மீறிய சக்தி ஒன்று இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளது. நிச்சயம் உள்ளது. அந்தச் சக்தியே ஒன்றினைப் படைக்கவும், காக்கவும், அழிக்கவும் செய்கிறது. அந்தச் சக்தியால் படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும், அந்தந்தப் படைப்பின் நோக்கங்களுக்கு உட்பட்டு, நீண்டதூரம் பிரயாணம் செய்து, இறுதியில் ஒருநாள் அந்தச் சக்தியை மீண்டும் அடைந்து விடுகின்றன. அதாவது தன்னைப் படைத்தவனையே, அந்தப் படைப்பு இறுதியில் சென்று சேருகிறது. இது எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானதொரு விதியாகும்.
அந்த உயிரினங்களில் மனித உயிரினம் சற்று மேம்பட்ட வடிவம் எனலாம். ஏனெனில், மனிதர்களுக்குத் தன்னைப் படைத்த சக்தியினைப் பற்றிச் சிந்திக்கவும், அறியவும், அறிந்ததனை ஆராய்ச்சி செய்யவும், வாய்ப்புக்கள் உள்ளன. அந்த வாய்ப்புக்களைப் பயன்படுத்தி மனிதன் முதலில் தன்னை உணர முயற்சித்தான். அதில் வெற்றிபெற்ற பிறகு தன்னைப் படைத்த அந்தச் சக்தியினை உணர முயற்சித்தான். இப்படி, பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருவது போல, சில மேம்பட்ட மனித உயிரினங்கள், தன்னை உணர்ந்து கொண்டு, தன்னைப் படைத்த சக்தியினையும் உணர்ந்து கொண்டார்கள். அவ்விதம், அந்தச் சக்தியினை உணர்ந்து கொண்டவர்கள், அந்த சக்தியினை அடைய மதமோ, ஜாதியோ இனமோ, பாலின வேறுபாடுகளோ தடையில்லை என அறிந்து கொண்டார்கள்.
அதேபோல, தன்னைப் படைத்த சக்திக்கும் தனக்கும் இடையில் எந்தவித தடங்கலும் இல்லாத நேரடித் தொடர்பினை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள். அதாவது,வாங்குபவர்களுக்கும், விற்பவர்களுக்கும் இடையில் இடைத்தரகர் இல்லாத நேரடி வணிகம் போன்று அவர்கள் அந்த சக்தியோடு இணைந்து செயல்பட்டார்கள்.
அம்மாதிரியான மேம்பட்ட மனித உயிர்கள் மகான்கள், சித்தர்கள், ரிஷி, முனிகள் என்று அழைக்கப்பட்டார்கள். தாங்கள் உணர்ந்த உயரிய சக்தியினைச் சூசகமாக மக்களுக்குச் சொன்ன அவர்கள், அந்தச் சக்தியின் துணை கொண்டு மக்களுக்கு உரிய நல்லவைகளைச் செய்யவும் தவறவில்லை. இவ்விதம், மக்களுக்கு உரிய நல்ல விஷயங்களை செம்மையாக நிறைவேற்றவும், தம்மைத்தாமே செழுமைப்படுத்திக் கொள்ளவும் தங்களுக்குள் அவர்கள் குரு -சிஷ்ய உறவு முறைகளையும் ஏற்படுத்திக் கொண்டார்கள்.
அப்படி சித்தர் திருமூலருக்குச் சிஷ்யனாக இருந்தவர்தான் காலங்கிநாதர் என அழைக்கப்பட்ட கஞ்சமலை சித்தர்.
நீங்களும் அந்தக் காயகல்ப குளத்தில் குளித்து என்றும் இளமையாக இருக்க வாழ்த்துகள். நெகடிவ் என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் பதிலாக எதிர்மறை என்ற பதத்தைப் பயன்படுத்தி இருக்கலாம்.