Home » ஒரு குடும்பக் கதை – 91
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 91

91. ஆபரேஷன் போலோ

மவுண்ட் பேட்டனுக்குப்பின் ராஜாஜிதான் கவர்னர் ஜெனரல் ஆகப் பதவி வகிக்க வேண்டும் என்று மவுண்ட் பேட்டன், நேரு, படேல் ஆகிய மூவருமே ஒருமனதாக விரும்பினார்கள். எனவே, நேருவின் அக்கடிதத்துக்கான ராஜாஜியின் பதிலை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள்.

“உங்கள் கடிதங்களில் உள்ள சொற்பிரயோகங்கள் நான் மறுப்பதற்கு இடமளிக்காத வகையில் அமைந்திருக்கின்றன. எனக்கு அளிக்கப்பட்டுள்ள கௌரவத்துக்கும் என்னிடம் வைக்கப்பட்டுள்ள நம்பிக்கைக்கும் நன்றி. உங்களுக்கு உதவியாக இருக்க முடியுமென்றால் மகிழ்ச்சிதான். ஆனால் எந்த அளவுக்கு நான் உபயோகமாக இருக்கப் போகிறேன் என்பதில் எனக்குச் சந்தேகங்கள் உண்டு” என்று ராஜாஜியிடமிருந்து நேருவுக்கு பதில் வந்தது.

ராஜாஜி கவர்னர் ஜெனரல் பதவியை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டியதற்குச் சில காரணங்கள் இருந்தன. முதலாவது, ராஜாஜி எப்போதுமே பதவி ஆசை கொண்டவரல்ல; இரண்டாவது, அது பொறுப்புக்கள் நிறைந்த ஆனால் அதிகாரங்கள் குறைந்த ஒரு பதவி. மூன்றவதாக பிரதமர் நேருவுக்கும், உள்துறை அமைச்சர் படேலுக்கும் இடையிலான கருத்து வேற்றுமைகள் பற்றி அவர் நன்கு அறிவார்.

ஆனாலும் இந்தக் காரணங்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, அவர் பதவியை ஏற்றுக் கொள்ளவும் முக்கியமான காரணங்கள் இருந்தன. முதலாவது அந்தப் பதவிக்குரிய கௌரவம்.

அடுத்து, நேரு, படேல் இருவருமே ராஜாஜிதான் அந்தப் பதவிக்குப் பொருத்தமானவர் என மனப்பூர்வமாக நினைத்து, அவரை பதவியை ஏற்றுக் கொண்டு தங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

நேரு எழுதிய கடிதத்தைத் தவிர, சர்தார் படேலும் ராஜாஜிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் “டெல்லிக்கு நீங்கள் வந்தால், எங்களுக்குப் பேருதவியாக இருக்கும். தனி நபர் செல்வாக்கு காங்கிரஸ் கட்சியை ரொம்பவும் பலவீனப்படுத்திக் கொண்டு வருகிறது. உங்கள் உதவி, நிர்வாகக் காரியங்களில் மட்டுமின்றிக் கூட்டுச் சிந்தனையை மீண்டும் அமலுக்குக் கொண்டு வருவதிலும் பெருமதிப்புடையதாக விளங்கும்” என்று அவர் கூறியிருந்தார்.

அதற்கு ராஜாஜி “உங்களுக்கும் ஜவாஹர் லால்ஜிக்கும் என்னால் சிறிதளவேனும் உதவ முடியுமென்றால் அதற்காகப் புது டெல்லி அரசாங்க மாளிகையின் பொறுமையைச் சோதிக்கும் வாழ்க்கைக்கு என்னை உள்ளாக்கிக் கொள்ள, நான் தயாராக இருக்கிறேன்” என்று ராஜாஜி பதில் எழுதினார்.

ராஜாஜி, கவர்னர் ஜெனரலாகப் பதவி ஏற்பதற்கு ஆறாவது ஜார்ஜ் மன்னர் சம்பிரதாய அங்கீகாரம் அளித்தார். வங்காள மக்களிடமிருந்து பிரியாவிடை பெற்று, விமானப் படை விமானத்தில் டெல்லிக்குப் புறப்பட்டார் ராஜாஜி. மவுண்ட் பேட்டன், நேரு, படேல் மூவரும் டெல்லி விமான நிலையத்தில் ராஜாஜியை வரவேற்றார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!