“எங்களுக்கு ஜனனி அக்கா போட்டோவைக் காட்டுங்கம்மா. நாங்க பாக்கணும் அப்படின்னு பள்ளிக் குழந்தைங்க கேப்பாங்க. அது எதுக்கும்மான்னு கேட்டா எங்க வாழ்க்கையை மாத்தி வெச்சவங்க அவங்க. அவங்களுக்கு பெருமை தேடித் தர்ற மாதிரி நாங்க நடந்துக்குவோம்மா என்று அந்த ஸ்கூல் பசங்க உறுதியாச் சொல்லும்போது என்னை விட்டுப் போன என் மகள் ஜனனி இவங்க ரூபமா இனிமே இருப்பாங்கன்னு ஒரு ஆறுதல் எனக்குள்ள வரும். அவளோட பிறப்புக்கும் என்னோட இருப்புக்கும் ஒரு அர்த்தம் கிடைக்கும் சார். அந்தச் சந்தோசம் இந்த ஜென்மத்துக்குப் போதும். இந்தப் புகழ், பேட்டி, போட்டோ, இதெல்லாம் எனக்கு எப்பவும் தேவையே இல்லை. அதனாலதான் பேட்டின்னு யார் கேட்டாலும் உடனே பாக்கறதில்லை. கொடுக்கறதையும் கொடுத்துட்டு அதுல விளம்பரம் தேடினா அந்தச் செயலுக்கு அர்த்தமே இல்லையே. அதனால தான் நீங்கக் கேட்டவுடனே நான் சரின்னு சொல்லல. மன்னிச்சுக்குங்க” என்றார் மதுரையைச் சேர்ந்த ஆயி பூரணம் அம்மாள்.
கடந்த சில வாரங்களாகத் தமிழகத்தில் உள்ள அனைத்து மீடியாக்களின் பார்வையும் இவர் மீதுதான் இருந்தது. இருக்கிறது. தனக்கு தாய் வீட்டுச் சீதனமாக வந்த 1,52 ஏக்கர் நிலத்தை யா.கொடிக்குளம் அரசுப் பள்ளிக்கு எழுதிக் கொடுத்து இருக்கிறார். இது போதாதென்று அருகாமையில் இருந்த இன்னொரு 91 சென்ட் நிலத்தையும் சேர்த்து அந்தப் பள்ளி வளர்ச்சிக்குக் கொடுத்து விட்டார். இவற்றின் இப்போதைய சந்தை மதிப்பு பத்துக் கோடி ரூபாய் வரை இருக்கும். அரசுப் பள்ளிக்கு இதுபோன்று தானம் செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய அனைத்து நடைமுறைகளையும் கடைப்பிடித்து இதைச் செய்துள்ளார். அரசுக்குத் தானப் பத்திர பதிவு செய்து கொடுத்ததை முறையாக முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா முன்னிலையில் உறவினர்களுடன் வந்து சமீபத்தில் ஒப்படைத்தார்.
“மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் முறையா விசாரிச்சு, எந்தவொரு வில்லங்கமும் இல்லாத வகையில பத்திரம் எழுதிக் கொடுத்தேன். பள்ளி கட்டடம் தவிர எந்த வணிக உபயோகத்திற்கும் உபயோகப் படுத்தக் கூடாது. பள்ளி வளாகத்திற்கு என் பொண்ணு ஜனனி பேரை வெக்கணும். இது அரசுக்கு என்னோட கோரிக்கை. இதுவும் ஒரு ஆறுதலுக்குத் தான்.
Add Comment