Home » அத்திரிபாச்சா உருண்டை
உணவு

அத்திரிபாச்சா உருண்டை

“இழையை உடைச்சா குகை மாதிரி ஓட்டை இருக்கணும். அதை வைச்சு உறிஞ்சி இழுத்தோம்னாக்க, தேனே மேல ஏறி வரனும்.” என பாட்டி ஆரம்பித்தால் “அதுனாலதான் அதுக்கு தேங்கொழல்னு பேரு வச்சிருக்காங்க…” என பிள்ளைகளெல்லாம் சேர்ந்து கோரஸாகப் பாடி முடிப்போம்.

ஒவ்வொரு தீபாவளிக்கும், விறகடுப்பில் பெரிய இரும்புச் சட்டியை வைத்துக் கொண்டு தேன்குழல் பிழிவாள் பாட்டி. முதல் ஈடு போலவே கடைசி ஈடு வரை வெள்ளை வெளேரென்று வரும். ஒவ்வொரு இழைக்குள்ளும் ஓட்டை இருக்கும். அதை ஏதோ சிகரெட் போல வாயில் வைத்து இழுத்து ஊதிப் பார்ப்போம். ஒரு கிளாஸ் தண்ணீரைக் குழலை வைத்துக் குடித்துப் பார்ப்போம்.

தேன்குழலை வைத்துக் காப்பியை உறிஞ்சிக் குடித்தால் பிரமாதமாக இருக்கும். உட்பக்க ஓட்டை காபியில் ஊறி மிருதுவாகவும், வெளிப்பக்கம் ‘கரக்முரக்’கென்றும் இருக்கும். கடைவாய்ப் பற்கள் இல்லாத பாட்டி, வாயில் இரண்டு இழை முறுக்கைப் போட்டுக் கொண்டு காபியை விட்டுக் கொள்வாள். தோய்ந்த்தும் ஊறிவிடும். மாரி பிஸ்கெட்டைவிட மிருதுவான முறுக்கோடு சேர்ந்த காபி/டீ சாலச் சிறந்ததாக இருக்கும்.

அதையே சாப்ஸ்டிக் போல உபயோகித்து ஐஸ்க்ரீமை எடுத்தும் சாப்பிடலாம். பல்லில் படரும் குளுமையை மட்டுப்படுத்த படக்கென முறுக்கைக் கடித்துக் கொள்ளலாம். குளிர்ச்சியாக ஏதாவது சாப்பிட்டவுடன் உப்புப் பண்டம் சாப்பிட்டால் சளி பிடிக்காது என்பது நாங்கள் நம்பும் தொன்ம உண்மை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!