தேர்தல் காலத்தில் ஆளுங்கட்சி என்ன செய்தாலுமே அது வாக்கு சேகரிப்பு சார்ந்த செயலாகத்தான் விமரிசிக்கப்படும். ஆனால் அதற்காக ஒரு மாநில அரசு தனது பட்ஜெட்டில் சமரசம் செய்துகொள்ள இயலாது.
இம்முறை தமிழ்நாடு அரசின் பட்ஜெட் விவசாயிகளுக்கு, எளிய தொழிலாளிகளுக்கு, பெண்களுக்கு, ஓய்வூதியம் பெறும் முதியோருக்குச் சாதகமானதாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், சற்றே திகைப்பூட்டும் விதத்தில் முற்றிலும் மாணவர்களுக்கு, இளைய தலைமுறையினருக்குச் சாதகமான பட்ஜெட்டாக வந்திருக்கிறது.
இதையும் விமரிசிக்கலாம். முதல் முறை வாக்களிக்கவிருப்போரைக் கவர்ந்திழுப்பதற்காகத் திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என்று சொல்லலாம்.
ஆனால், ஒரு மாநிலம் தனது வளமான எதிர்காலத்துக்கான மிகச் சரியான அடித்தளம் அமைப்பது என்பது, ஒழுங்கான விதத்தில் இளைய தலைமுறையை வார்த்தெடுப்பதன் மூலம் மட்டுமே சாத்தியம். இதனை முன்வைத்து மேற்படி விமரிசனத்தைப் பெரிதாகப் பொருட்படுத்த அவசியமில்லை.
Add Comment