அரிசி விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த பாரத் அரிசி என்ற பெயரில் சில்லறைச் சந்தையில் ஒரு கிலோ அரிசி ரூ.29/- க்கு விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த ஓராண்டாக அரிசி விலை உயர்ந்து கொண்டுள்ளது. இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க மத்திய அரசு மானிய விலையில் நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. பாரத் ஆட்டா மற்றும் பாரத் தால் என கோதுமை மற்றும் பருப்பு வகைகளை ஏற்கனவே வெளியிட்ட மத்திய அரசு இப்போது பாரத் அரிசியையும் வெளியிடவுள்ளது.
இது தொடர்பாக உணவுத் துறை அமைச்சர் சஞ்சீவ் சோப்ரா “உள்நாட்டு தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக மத்திய அரசு அரிசிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. ஆனாலும் ஓராண்டில் அரிசி விலை பதினைந்து சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த தேசிய வேளாண் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் மத்திய அரசினுடைய விற்பனை மையங்கள் மூலம் சில்லறைச் சந்தையில் மானிய விலை ரூ.29/-க்கு அரிசி விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு பாரத் அரிசியை ஒரு கிலோ ரூபாய். 29/-க்கு விற்பனை செய்யச் சாத்தியம் உள்ளதா? இந்த பாரத் அரிசித் திட்டத்தால் மக்களுக்குப் பயன் உள்ளதா? இந்தத் திட்டத்தால் மத்திய அரசு, மாநில அரசு, விவசாயிகள் அல்லது பொதுமக்கள் இவர்களில் யாருக்கு லாபம், யாருக்கு நட்டம்?
முதலில் பாரத் அரிசித் திட்டம் எவ்வாறு மக்களுக்கு வழங்கப்படும் என்பதைப் பார்ப்போம்.
Add Comment