Home » ஜெமினி – சுந்தர் விவகாரம்: எது உண்மை நிலை?
அறிவியல்-தொழில்நுட்பம்

ஜெமினி – சுந்தர் விவகாரம்: எது உண்மை நிலை?

ஜெமினி அல்லது மிதுன ராசிக்கு கேதுகாரகனால் சற்று டென்ஷன் அதிகம் என்று புத்தாண்டுப் பலன்களில் சொல்லப்பட்டிருந்தது. அதை கவனிக்காமலோ என்னவோ கூகுள் தனது செய்யறிவுச் செயலித் திட்டத்திற்கு (generative AI Project) அதே பெயரை வைத்தது. இப்போது சோதனை மேல் சோதனை என்று பாடாத குறையாக நொந்து போயிருக்கிறது.

ஆரம்பத்தில் Bard-ன் குறைகளெல்லாம் நீக்கி செப்பனிட்ட செம்பதிப்பு என்ற பில்டப்பெல்லாம் நன்றாகத்தான் இருந்தது. சாட்ஜிபிடி என்ற மோனோபோலிக்கு மிகச்சரியான மாற்று என்றெல்லாம் ஆரம்பக்கட்ட விமர்சனங்கள் வரத்தொடங்கின. போதாத காலமெல்லாம் போன சில வாரங்களில்தான் ஆரம்பித்தது.

மிக முக்கியமாக இரண்டு சங்கதிகளில்….

`பிரதமர் மோதி பாசிசவாதியா` என்று ஜெமினியிடம் கேட்கப்பட்ட ஒரு ரேண்டம் கேள்விக்கு, `மோதி பின்பற்றும் சில கொள்கைகளால் சிலர் மோதியை பாசிசவாதி என்று அழைக்கிறார்கள்` என்று சர்ச்சைக்குரிய பதில் அளித்திருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!