Home » முன்களப் பெண்கள்
பெண்கள்

முன்களப் பெண்கள்

புரட்சி என்றொரு சொல் நம் மனதில் எழுப்பும் பிம்பங்கள் பெருமளவில் ஏன் ஆணுருவங்களாகவே இருக்கின்றன? வரலாற்றின் பக்கங்களில் புரட்சிக்கும் பெண்களுக்கும் தொடர்பெதுவும் இல்லையா? இவ்வாறான அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இந்த மகளிர் தினத்தில் விடைதேடுவோம்.

புரட்சி என்பது ஒரு தினசரி நிகழ்வல்ல. வாழும்சூழல் ஏற்படுத்தும் அழுத்தம் ஓரெல்லையைத் தாண்டும்போது நிகழும் பெருவெடிப்பே புரட்சி. மாபெரும் புரட்சிகள் நிகழ்ந்த காலத்தில்கூட ஒட்டுமொத்தச் சமூகமுமே அதில் கலந்துகொண்டு விடவில்லை. நிகழ்வதை வேடிக்கை மட்டுமே பார்க்கும் பெருங்கூட்டமொன்று என்றென்றைக்கும் சமூகத்தில் இருந்து வந்துள்ளது. எதிர்க்குரல் எழுப்பியவர்களின் எண்ணிக்கை இக்கூட்டத்தை ஒப்புநோக்குகையில் மிகச்சொற்பமே. இதில் பெண்கள் முன்னின்று நிகழ்த்திய சில நிகழ்வுகளைத் தெரிந்து கொள்வோம்.

தைரியமான தொழிலாளர் தலைவி – கிளாரா லெம்ளிச் (1886 – 1982)

நியூயார்க் நகரின் ஆடைத் தொழிற்சாலைகளில் நீதிக்காகப் போராடிய தைரியமான பெண்களில் கிளாரா லெம்ளிச் முதன்மையானவர். 1886-ஆம் ஆண்டு உக்ரைனில் பிறந்தவர் கிளாரா. அவரது குடும்பம் 1903-ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தது. இளம் வயதிலேயே ஆடைத் தொழிற்சாலையொன்றில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு நிலவிய கொடுமை, குறைந்த ஊதியம் போன்ற பிரச்சனைகளை நேரடியாகச் சந்தித்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!