Home » ‘புரிய வைப்பதுதான் பெரிய பிரச்னை!’ – நம்ரதா பாலி
பெண்கள்

‘புரிய வைப்பதுதான் பெரிய பிரச்னை!’ – நம்ரதா பாலி

ஈலா பட்

இந்தியாவில் நூற்றைம்பது மில்லியன் முறைசாராப் பெண் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்குச் சரியான வேலைவாய்ப்பு, தினச் சம்பளம், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்புகள் குறித்த ஒழுங்குமுறைச் சட்டங்கள் உள்ளன. ஆனால் அவை நடைமுறையில் பின்பற்றப்படுவது இல்லை. அனைத்து வகைகளிலும் பெண் தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள். ஒரே வேலை செய்யும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மாறுபடும் கூலி என்னும் முறை இன்னும் இருப்பதே பெண் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதற்கு ஆதாரம்.

குஜராத்தின் முக்கியத் தொழிலான ஜவுளித் தொழிலில் ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கிடையே அடிப்படை உரிமைகளுக்கான மாறுபாட்டைக் கண்ட ஈலா பட் சட்ட விதிமுறைகளின்படி பெண் தொழிலாளர்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க 1972-ஆம் ஆண்டு சுயதொழில் பெண்கள் சங்கம் (சேவா) என்று ஒரு சங்கம் தொடங்கினார். (SEWA – self employed women’s association – www.sewa.org)

அப்போது தொழிலாளர் சட்டம் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் நலன்களையே பிரதானமாக முன்வைத்து இருந்தன. அமைப்புசாரா சுயதொழில் செய்பவர்களுக்கு- முக்கியமாக பெண்களுக்கு- அவர்களுடைய நலன் மற்றும் பாதுகாப்பு சார்ந்து தொழிலாளர் சட்டம் பெரிதாக இல்லை.

சங்கத்தின் அடிப்படை நோக்கமும் சேவையும் அப்போது சுயதொழில் செய்த பெண்களுக்குத் தேவைப்பட்டதால் சுயதொழில் பெண்கள் சங்கம் தொடங்கும் போதே இரண்டு லட்சம் பெண்கள் இணைந்தார்கள். தொடங்கும் போதே உலகின் பெரிய சுயதொழில் சங்கமானது இந்திய சுயதொழில் பெண்கள் சங்கம். ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய ஈலா பட் சுயதொழில் பெண்கள் சங்கம் தொடங்கும் முன்னர் இஸ்ரேல் சென்று கூட்டுறவு மற்றும் தொழிலாளர் சம்பந்தப்பட்ட பட்டயப் படிப்பு ஒன்றைப் படித்தார்.

அந்தக் காலகட்டத்தில் சுயதொழில் புரிந்த பெண்களுக்கு இச்சங்கத்தின் தேவை இருந்ததால் ஒவ்வொரு நாளும் புதிய உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கில் சேர்ந்தார்கள். ராமன் மகசேசே உட்பட பல விருதுகளைப் பெற்ற ஈலா பட் அமெரிக்காவின் ராக்பெல்லர் அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவராகவும் இருந்திருக்கிறார். பில்கேட்ஸ் பவுண்டேஷனில் இருந்தும் உதவிகளைப் பெற்றுள்ளது இவ்வமைப்பு.

சுயதொழில் பெண்கள் சங்கம் மற்றும் மைய நிறுவனத்தின் இயக்குனராக இருக்கும் நம்ரதா பாலியுடன் உரையாடினோம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!