Home » ஒரு குடும்பக் கதை – 94
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 94

94. ஹே ராம்!

டெல்லியில் காந்திஜி தன்னுடைய உண்ணாவிரத அறிவிப்பினை வெளியிட்ட செய்தியை டெல்லியிலிருந்து சுமார் ஆயிரத்து நூறு கிலோமீட்டர் தள்ளி இருந்த பூனாவில் ஹிந்து ராஷ்டிரா அலுவலகத்தில் இருந்த நாதுராம் கோட்சேவும், நாராயண ஆப்தேவும் அறிந்தபோது அவர்கள் கொதித்துப் போனார்கள். பிரிவினையையொட்டி நடந்த வன்முறைகளால் இந்துக்கள், மற்றும் சீக்கியர்களுக்கு ஏற்பட்ட கொடூரமான பாதிப்புகளால் அவர்களின் கோபம் இன்னமும் அதிகமானது.

இந்திய சுதந்திரம், தேசப்பிரிவினைக்கு வழிவகுத்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவர்கள் தங்கள் பத்திரிகையில் சுதந்திர தினத்தன்று தங்களது கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தார்கள். எப்படித் தெரியுமா? பத்திரிகையில் தலையங்கம் வெளியாகும் இடத்தை வெற்றிடமாக விட்டு, அதற்கு கறுப்பு வண்ண பார்டர் கட்டி இருந்தார்கள். மேலும், பாகிஸ்தானைப் பிரித்துக் கொடுத்தபோது, ஒப்புக்கொண்டபடி பாக்கி இருக்கும் பாகிஸ்தானின் பங்கான 55 கோடி ரூபாயை இந்தியா கொடுத்தே தீரவேண்டும் என்ற காந்திஜியின் பிடிவாதத்தை அவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

“இது காந்திஜியின் அரசியல் பிளாக்மெயில்! இந்திய அரசியல் களத்திலிருந்தே காந்தியை அப்புறப்படுத்துவதுதான், எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு!” என்று கடுமையாக விமர்சனம் செய்தார்கள். அப்போது ஆப்தேவிடம் கோட்சே சொன்னது, “நமது அறிவு, திறமை, சக்தி, சொத்து எல்லாவற்றையும் அந்த லட்சியத்துக்கே நாம் பயன்படுத்த வேண்டும்! நாம் காந்தியை கொன்றுவிடுவோம்!”

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!