Home » உணவுப் பெட்டியில் எமன்
உலகம்

உணவுப் பெட்டியில் எமன்

பிரமிளா

பாராசூட்டில் பறந்து வந்த உணவுப் பொருள்கள் அடங்கிய பிரம்மாண்டப் பெட்டி காஸா அகதி முகாம் வீடு ஒன்றின் மீது விழுந்ததில் உள்ளிருந்தோர் இறந்தனர். பாராசூட் மெதுவாகத் தரையிறங்கித்தான் கீழே நிற்கும். உணவுப் பெட்டிகளைத் தாங்கி வந்த ஏழெட்டுப் பாராசூட்கள் என்ன காரணத்தினாலோ விரியாமல் போயின. இதனால், உணவுப் பெட்டிகள் ராக்கெட் போல அவ்வளவு உயரத்தில் இருந்து வேகமாக வந்து விழுந்தன. வெளியில் காத்திருந்தோர் பலர் ஓடித் தப்பிதனர். சிலர் மாட்டிக் கொண்டனர். கூரைக்கடியில் இருந்தோருக்கு விழுந்தது வெடிகுண்டா, உணவுப்பெட்டியா என்று தெரிந்து கொள்ள நேரமின்றி உயிர் பிரிந்தது. இச்சம்பவத்தில் ஐந்து பேர் இறந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

நூற்றிப் பதினேழு பேர் இறந்த உணவு ட்ரக் சம்பவத்தில் தங்கள் மேல் குற்றம் இல்லை என்பதைச் சொல்ல வீடியோ வெளியிட்டது இஸ்ரேல். அவர்கள் தரப்பு நியாயத்தைவிட பாலஸ்தீனியர்களின் அவல நிலையையே வீடியோக்கள் காட்டின. காஸாவில் இறக்கும் பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை ஐயாயிரம் பத்தாயிரம் இருந்த போதெல்லாம் அமெரிக்க அதிபர் அதை ஒப்புக் கொள்ளவில்லை. அவர்கள் சொல்லும் கணக்கை எப்படி நம்பமுடியும் என எதிர்க்கேள்வி கேட்டார். தற்போது 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்ட பிறகு அதில் அவருக்கு நம்பிக்கை பிறந்துள்ளது. “இஸ்ரேலுக்குத் தீவிரவாதத்தை எதிர்க்க உரிமை உள்ளது போல் காஸா மக்களின் உயிர் காக்கும் கடமையும் உள்ளது” என்று வீரவசனம் பேசினார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!