2024-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகள் தங்களுடைய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டன. தமிழ்நாட்டிலும் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. தலைமையில் மூன்று கூட்டணிகள் உருவாகியிருக்கின்றன. மிகத் தீவிரமாகத் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்ட், காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கென தனித்துவமான கொள்கைகள் உண்டு. அந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் அவரவர் உரிமை. சிறிதோ பெரிதோ அவர்களுக்கென பரவலான வாக்கு வங்கி தமிழகம் முழுவதும் இருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர், ம.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சி போன்ற கட்சிகளும் அவரவர் கொள்கைகளில் உறுதியோடு செயல்படுபவர்கள்தான். ஆனால் மிகச் சில தொகுதிகளில் மட்டுமே அவர்களுக்கு வாக்கு வங்கி இருக்கிறது என்பதைக் கடந்த காலத் தேர்தல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
Add Comment