காஸா கடற்பகுதியில் அவசரமாக ஒரு கப்பல்துறையை அமைக்கவிருக்கிறது அமெரிக்கா. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை அந்தக் கப்பல்துறை மூலமாக வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறது.
அக்டோபர் ஏழாம் தேதியிலிருந்து காஸாவின் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போர் இன்னும் முடிந்தபாடில்லை. ஐந்து மாதங்களுக்கும் மேலாக வான் வழியாகவும், தரை வழியாகவும் நில்லாமல் நடந்த தாக்குதல்களில் முப்பத்தியோராயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருகின்றனர். காஸாவிலிருக்கும் 70 சதவீத மக்களின் வீடுகள் இடிந்து, குடியிருக்க வழியில்லாமல் சேதமடைந்திருக்கின்றன.
“இந்த நிலை தொடர்ந்தால் வெகு விரைவில் 2.3 மில்லியன் பாலஸ்தீனியர்கள் பஞ்சத்தால் பாதிக்கப்படுவர்.” என்று எச்சரித்தது ஐக்கிய நாடுகள் சபை. இதைத் தொடர்ந்து மார்ச் ஏழாம் தேதி தாற்காலிகக் கப்பல்துறை அறிவிப்பை வெளியிட்டார் ஜோ பைடன். இதன் மூலம் அதிக அளவிலான உணவு, தண்ணீர், மருந்துகள் போன்ற அடிப்படை உதவிகள் தினந்தோறும் பாலஸ்தீன மக்களுக்கு கிடைக்கப் பெறும் என்றும் குறிப்பிட்டார். கப்பல்துறை என்பது சரக்குகளைப் பெறும் வகையில் கடலின் ஓரிடத்தில் நிறுவப்பட்டிருக்கும் மிகப்பெரிய அமைப்பிடம் ஆகும். அங்கிருந்து படகுகள் மூலம்தான் கரையை அடைய முடியும்
Add Comment