சோழர் காலக் குடவோலை முறை தொடங்கி மின்னணு வாக்கு வரையான காலம் வரை மக்களாட்சியின் மகத்துவமே, மக்கள் அனைவரும் சேர்ந்து தங்களுக்குப் பிடித்த ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்க முடிவதுதான். இவரால் நம்மை நல்ல முறையில் வழிநடத்திச் செல்ல முடியும் என்ற நம்பிக்கையில் ஒருவரை அல்லது ஒரு கட்சியை ஆட்சி செய்ய வைக்க முடிவதும், அவர் தவறு செய்கிற போது, அவரை நீக்க முடிவதும் வேறு ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்க முடிவதுமே மக்களாட்சியின் மிக அடிப்படையான உரிமை. அந்த உரிமையை அவர்களுக்குத் தருவது வாக்குச் சீட்டு.
அமெரிக்காவில், ஓட்டுநர் உரிமம் பெறும் போதே வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ளலாம். விருப்பப்பட்டால், கட்சியிலும் கூட. அல்லது கட்சிச் சார்பற்றவர் என்றும் குறித்துக்கொள்ளலாம். புதிதாகக் குடியுரிமை பெற்றவர்கள்கூட ஓட்டுநர் உரிமம் பெறும் போதோ அல்லது நகரசபை அலுவலகங்களுக்குச் சென்றோ அல்லது இணையதளங்களிலோ படிவங்களைத் தரவிறக்கித் தேவையான ஆதாரங்களைக் காட்டி பதிவு செய்து கொள்ளலாம். அமெரிக்காவின் வாக்காளர் எண்ணிக்கை 210 மில்லியன் ஆகும். ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக 49 மில்லியனும் குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக 39 மில்லியன் வாக்காளர்களும் பதிவு செய்திருக்கிறார்கள்.
பல போராட்டங்கள் செய்து பெற்ற அந்த வாக்கு உரிமையைப் பல நாடுகளில் தேர்தல் நேரங்களில் மக்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதே இல்லை. இதில் அமெரிக்காவும் விதிவிலக்கல்ல.
Add Comment