Home » எப்படி ஜெயித்தார் முகேஷ் அம்பானி? எதனால் தோற்றார் அனில் அம்பானி?
வர்த்தகம்-நிதி

எப்படி ஜெயித்தார் முகேஷ் அம்பானி? எதனால் தோற்றார் அனில் அம்பானி?

குஜராத்தின் ஜாம்நகரே ஜாம் ஆகும் அளவிற்குத் தனது மகன் ஆனந்த்தின் திருமண விழாவை (திருமணத்தை அல்ல, அதற்கு முந்தைய விழாவை) நடத்தி முடித்திருக்கிறார் முகேஷ் அம்பானி. உலகெங்குமிருந்து தலைவர்கள், பிரபலங்கள் வந்திறங்கப்போகிறார்கள் என தற்காலிகமாக ஜாம் நகர் விமான நிலையத்திற்குச் சர்வதேச அந்தஸ்துகூடத் தரப்பட்டது. மூன்று நாளுக்கான செலவுகள் மட்டும் ஆயிரத்து இருநூறு கோடிக்கு மேல் என ஊடகங்கள் பேசித் தீர்த்திருக்கிறார்கள்.

அண்ணன் ஆசியாவின் பெரும் பணக்காரர். தம்பியோ லண்டன் நீதிமன்றத்தில் தனது நிகர மதிப்பு பூஜ்யம் என்று 2020-ல் அறிவித்தார் . ஒரு காலத்தில் அவரும் உலக செல்வந்தர்கள் பட்டியலிலிருந்தவர் தான். ரிலையன்ஸ் நிறுவனத்தின் வெற்றி முகமாக விளங்கியவர் இருபது வருடங்களில் எப்படி திவாலானார்?

2002-ல் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டு திருபாய் அம்பானியின் உயிர் பிரிந்தபோது, அவர் உலகின் 136-வது பெரிய பணக்காரர். அரும்பாடு பட்டு அவர் உருவாக்கிய சாம்ராஜ்யத்தில் தனது வாரிசுகளின் பொறுப்புகள் என்ன என்பதைப் பற்றி உயிலாவது எழுதியிருக்கலாம். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என நினைத்தாரோ என்னமோ…. எந்தக் குறிப்பையும் விட்டுச்செல்லவில்லை. அப்போது இரு மகன்களும் நிறுவன பொறுப்புகளிலிருந்தனர். அப்பாவிற்குப் பிறகு, அண்ணன் சேர்மேன் தம்பி துணை சேர்மேன் என பணியைத் தொடர்ந்தனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!