நீரின்றி அமையாது உலகு
அரங்கம் நிறைந்திருந்தது. முதல் வரிசையில் அமர்ந்திருந்தான் திவாகர். இன்னும் சில நிமிடங்களில் அவனைப் பேச அழைத்துவிடுவார்கள். மடியில் அவனது லேப்டாப். தனது ப்ரசன்டேஷனை மீண்டுமொருமுறை ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்தான் திவாகர். எல்லாமும் சரியாக இருப்பதாகத்தான் தோன்றியது.
கண்களை மென்மையாக மூடி புருவ மத்தியில் கவனத்தை நிறைத்து ஆழமாய் மூச்சிழுத்தான் திவாகர். மூன்று மூச்சுகள் முடிந்ததும் கண் விழித்தான். திரையில் ஒரு செய்தி.
செக்யூரிட்டி அப்டேட் உடனே செய்ய வேண்டுமென்றது. இரண்டு நிமிடங்கள் தான் ஆகுமென்றது. அனிச்சையாக “ஓ.கே” பட்டனை க்ளிக் செய்தான் திவாகர். இப்போது செய்திருக்க வேண்டாமோ என்று அவன் யோசித்துக் கொண்டிருந்த போதே ‘அப்டேட் கம்ப்ளீட்டட்’ என்று சுபச் செய்தி சொன்னது லேப்டாப். அவனுக்கு நிம்மதியாக இருந்தது.
Add Comment