உலகின் மிகப் பெரிய தேர்தல் ‘திருவிழா’ என்றுதான் இந்தியத் தேர்தல்களை மற்ற நாடுகள் குறிப்பிடுகின்றன. இந்தக் கொண்டாட்டத்தில் டீக்கடை முதல் சமூக வலைத்தளங்கள் வரை பொதுமக்களும் கலந்து கொள்கிறோம். எவ்வளவு நேர்மையாக இந்தத் தேர்தல்கள் நடக்கின்றன என்பது விவாதத்துக்கு உரிய ஒன்று. அப்படி நடத்தச் சில விதிகள் உள்ளன.
தேர்தல் நடத்தை விதிகள் பல தலைப்புகளில் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளன. எல்லாக் கட்சிகளுக்கும் பொதுவாகச் சில விதிகள் உள்ளன.
வெறுப்பைத் தூண்டும் பதற்றத்தைக் கூட்டும் பேச்சுகள் கூடாது- தினமும் பத்துப் பேராவது இந்த விதியை மீறுகிறார்கள்.
தனி நபரைத் தாக்காமல் பிரசாரம் இருக்கவேண்டும். ஜாதி, மத அடிப்படையில் வாக்கு சேகரிக்கக்கூடாது. இன்னொரு கட்சி வாக்கு சேகரிக்கும் போது குழப்பம் ஏற்படுத்தக் கூடாது. வாக்குக்குப் பணம் கொடுப்பது கூடவே கூடாது. இதையெல்லாம் மீறுவதற்கென்றே திருமங்கலம் ஃபார்முலா, பி.ஜே.பி. ஃபார்முலா எனச் சில பிரத்யேக வழிமுறைகள் உள்ளன.
சிறப்பு கோகிலா !
உச்ச நீதி மன்றம் ரத்தம் வரத் தலையில் கொட்டினாலும் ‘வலிக்காத மாதிரி’ அடுத்தகட்ட ‘திருட்டு’ வேலைகளில் இறங்குவதை தினமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்…
பலியாடு நிச்சயமாக மக்கள்தான் !!
நன்றி.
நீதிமன்றங்களே நம்முடைய கடைசி நம்பிக்கை