இம்முறை குளிர்காலம் வந்து போனதே தெரியவில்லை. ஃபிப்ரவரியிலிருந்தே வெய்யோன் வெளுத்து வாங்க ஆரம்பித்து விட்டான். இன்னும்சில நாட்களில் ‘10 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரியைத் தாண்டியது’ என ஐ.பி.எல். செஞ்சுரிக்கு இணையாக வானிலை அறிவிப்புகள் வெளியாகத் தொடங்கிவிடும்.
அதிகரித்து வரும் வெப்பநிலை மேல் தோலிலிருந்து, உடல் உள்ளுறுப்புகள் வரை பல்வேறு பாதிப்புகளைக் கொண்டு வரலாம். அவற்றிலிருந்து நம்மை எவ்வாறு தற்காத்துக் கொள்ளலாம்? நம் முன்னோர்களெல்லாம் இந்த வெப்பக் காலத்தைப் பாதுகாப்பாகக் கடக்க என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றினர்? முக்கியமான விஷயங்களை மட்டும் பார்த்து விடலாம்.
Add Comment