இருபத்திரண்டு இந்தியப் பணியாளர்கள், இரண்டு அமெரிக்கப் பைலட்டுகளுடன் அந்தக் கப்பல் புறப்பட்டபோது, அதுவொரு பெரும் விபத்தைச் சந்திக்கப் போகிறது என்று யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை.
கப்பலில் பைலட்டா..? ஆம். சரிதான். பொதுவாக ஒரு சரக்கு கப்பல் துறைமுகத்தை நோக்கி வரும்பொழுதும், துறைமுகத்தை விட்டு வெளியே செல்லும் பொழுதும் பைலட் எனப்படும் உள்ளூர் மாலுமிகள் கப்பலுடன் பயணிப்பர். ஆழ்கடல் செல்லும் வரை பைலட் கட்டளைக்கேற்ப கேப்டன் மற்றும் கப்பலின் குழு கப்பலை ஓட்டுவார்கள். இது நடைமுறை.
மார்ச் 26, செவ்வாய் அதிகாலை ஒன்றேகால் மணி அளவில், நெடுஞ்சாலையில் 70 மைல் வேகத்தில் சென்ற காரானது பிரான்சிஸ் ஸ்காட் கி பாலத்தில் தடை செய்யப்படுகிறது. காரில் எழுபது மைல் வேகத்தில் சென்ற அதன் ஓட்டுனர் இரண்டு நிமிடம் முன்பாக வந்திருந்தால் பாலத்தில் சென்றிருக்கலாமே என்று வருத்தப்படுகிறார். அடுத்த இரண்டாவது நிமிடத்தில் 52 ஆண்டுகள் பழமை வாய்ந்த, மேரிலாண்டில் உள்ள பால்டிமோர் பாலம், ஒரு சரக்கு கப்பலால் மோதப்பட்டுச் சுக்குநூறாகச் சிதைந்து விழுகிறது. அமெரிக்காவின் மிட் அட்லாண்டிக் பெருங்கடலின் இரண்டாவது பெரிய துறைமுகமான பால்டிமோரின் வர்த்தகம் பாதிக்கப்படுகிறது.
விடியற்காலை 1:15….
திருத்தப்பட்டது – (ஆ-ர்)