காதலிக்காகப் பெரிதாக என்ன பரிசு தந்துவிடுவார்கள் நம் ஊரில்? ஒரு டெய்ரி மில்க், ஒரு டெடி பியர், அலங்காரப் பொருட்கள், சில போட்டோ ஃப்ரேம்கள் -இதுதான் நம்ம ஊர் லிஸ்ட். அமெரிக்கத் தொழிலதிபர் பேட்ரிக் தனது விஞ்ஞானி மனைவிக்கு 500 மில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொடையாகத் தந்துள்ளார். இனி யாரிடமும் நிதியுதவி கேட்டுக் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. கொடை அளித்தது மட்டுமல்லாமல் ஆர்க் இன்ஸ்டிடியூட் என்று ஒரு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். 50 முன்னணி விஞ்ஞானிகள், தனது மனைவியுடன் சேர்ந்து கண்டுபிடிப்புகளை நிகழ்த்த உள்ளார்கள் என அறிவிப்பும் வெளியிட்டுள்ளார். சரி…. மனைவிக்காக நிறுவனமெல்லாம் தொடங்கியவர், வாழ்க்கையில் மிக முக்கிய தினமான திருமணத்திற்காக எவ்வளவு செலவு செய்தார் தெரியுமா? பதில்- ஒன்றுமே இல்லை. ஒரு திருமண புகைப்படம் கூட வெளியிடப்படவில்லை. அவ்வளவு ரகசியமான திருமணம்.
பணக்காரரின் மூளை ஒரு விஷயத்தை எப்படி அணுகும்? எப்படி அவர்கள் பணக்காரர்கள் ஆகிறார்கள்? நம்மிலிருந்து அவர்கள் எப்படி மாறுபட்டவர்கள்? என்று அறிய இந்த ஒரு பணக்காரரின் வாழ்க்கையிலேயே நமக்கு நிறையப் படிப்பினைகள் உள்ளன. வாருங்கள்… பேட்ரிக் கொலிசன், ஜான் கொலிசன் சகோதரர்களை அறிந்து கொள்ளலாம்.
Add Comment