பூரி, சப்பாத்தி எல்லாம் தாத்தாவுக்கு மூன்றாம் பட்சம்தான். சிற்றுண்டி என்றாலே இட்லியும் தோசையும்தான். இல்லையென்றால் உப்புமா. அவர் சிறுவயதாக இருக்கும்போது உணவில் கோதுமையின் அறிமுகமே கிடையாது. மேத்தி சப்பாத்தி, மூளி பராத்தா என விதவிதமாகச் செய்வார் அத்தாட்டி. ஆனாலும் தாத்தாவுக்கு ஏதாவது விசேஷமாக வேண்டுமென்றால் அரிசிப் பண்டம்தான்.
அன்று தாத்தா, ‘இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?’ என்று கேட்க ‘கஞ்சிக் கொழுக்கட்டை பண்ணுவோம்’ என அறிவித்தார் அத்தாட்டி. நாகர்கோவிலில் இருக்கும் தாத்தாவின் சிநேகிதர் வீட்டிற்குப் போனபோது இதைச் செய்து தந்தார்களாம்.
“கஞ்சிக் கொழுக்கட்டையா? பேரே நல்லா இல்லையே அத்தாட்டி. கஞ்சின்னாலே ஜூரம் வந்து படுத்துக்கற சீன்தான் ஞாபகத்துக்கு வருது.”
Add Comment