பசியாலும் பஞ்சத்தாலும் நிலைகுலைந்த எத்தியோப்பியா, சோமாலியா போன்ற ஆப்பிரிக்க தேசத்துக் குழந்தைகளின் புகைப்படங்களை நாம் பார்த்திருப்போம். எலும்பும் தோலுமாகப் பார்க்கவே பரிதாபமாக இருக்கும். வெகு விரைவில் ஆப்கனிஸ்தான் குழந்தைகளும் இப்படி ஆக வாய்ப்பிருப்பதாக ஐநா எச்சரித்திருக்கிறது.
ஆஃப்கானிஸ்தான் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தேசம். போரெல்லாம் முடிந்து தாலிபன் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் பொருளாதாரச் சிக்கல்கள், மனித உரிமைக்கு எதிரான சட்டங்கள், கடுமையான வானிலை மாற்றங்கள் போன்றவற்றால் இன்றளவும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறது ஆஃப்கனிஸ்தான்.
‘ஆஃப்கானிஸ்தானில் ஐந்து வயதுக்குள் இருக்கும் பத்தில் ஒரு குழந்தைக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு இருக்கிறது. நாற்பத்து ஐந்து சதவீதப் பிள்ளைகள் வளர்ச்சிக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.’ என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய அறிக்கை ஒன்று.
Add Comment