விருது என்பது ஏதேனுமொரு துறையில் வென்றவர்களுக்கு வழங்கப்படும். எந்தச் செயலுமின்றித் தேமேயென்று இருக்கும் மரங்களுக்கும் விருது வழங்கப்படுவதுண்டு. இங்கல்ல… ஐரோப்பாவில். ‘ட்ரீ ஆஃப் த இயர்’ என்ற பெயரில் ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருதை இவ்வாண்டு போலண்டில் உள்ள பழமையான, பீச் (Beech) என்ற பெயர்கொண்ட இலையுதிர்காட்டு மரம் வென்றிருக்கிறது. சாதாரணமாக அல்ல, 39 ஆயிரத்து 158 வாக்குகளைப் பெற்று பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.
எந்தச் செயலுமின்றித் தேமேயென்றிருக்கும் மரம் என்று முந்தைய பாராவில் சொன்னதைச் சற்றே மாற்றிக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது. மரங்கள் செய்கிற சிறப்பான செயல் ஆக்சிஜனை வெளியிட்டு சுற்றுச்சூழலை மனிதர்கள் வாழத் தகுந்த இடமாக வைத்துக் கொள்வது. அதற்கே எத்தனை விருது தந்தாலும் தகும்தான். இந்த பீச் மரம் மற்ற மரங்களைவிடத் தடிமனான தண்டுடன் இருக்கும். இவை போலந்தின் நீம்சா பகுதியில் உள்ள வ்ரோக்லா பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பூங்காவில் அமைந்துள்ளன.
Add Comment