2004-ஆம் ஆண்டு. சோனியா பிரதமராவதற்குப் பலத்த எதிர்ப்பு அனைத்து தரப்பிலிருந்தும் எழுந்திருந்தது. அப்போது சோனியா இரண்டு விதமான மனநிலையிலிருந்தார். ஒன்று என்ன எதிர்ப்பு வந்தாலும் பிரதமர் பதவியை ஏற்பது. மற்றொன்று பிரதமர் பதவியை விட்டுக்கொடுத்துவிட்டு ராகுலும் பிரியங்காவும் வளர்ந்து தலைமையேற்கும் வரை காங்கிரஸ் தலைமையைத் தன்னிடம் தக்கவைத்துக் கொள்வது.
சரி, இப்போது யாரிடம் அரசின் தலைமைப் பொறுப்பை ஒப்படைப்பது என்னும் கேள்வி எழத்தானே செய்யும். அர்ஜூன் சிங், பிரணாப் முகர்ஜி, ஏ.கே.அந்தோணி எனப் பல பழுத்த காங்கிரஸ் தலைவர்கள் வரிசையிலிருந்தார்கள். ஆனால், சோனியா மிகச் சரியான முடிவெடுத்து, மன்மோகன் சிங்கைப் பிரதமர் பதவியில் அமர வைத்தார். இந்தியாவின் முதல் சீக்கியப் பிரமரானார். சுதந்திர இந்தியாவின் 14-வது பிரதமராக அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மன்மோகன் சிங்குக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அடுத்த பத்தாண்டுக் காலம் அவர்தான் இந்தியாவின் பிரதமராக இருந்தார்.
சோனியா காந்தி பிரதமரானால் மொட்டையடித்துக் கொள்கிறேன் எனப் பிரசாரம் செய்த பா.ஜ.க. தலைவர் சுஷ்மா சுவராஜின் தலை மயிர் தப்பியது.
Add Comment