இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம், விவாதம், கருத்துக் கணிப்புகள் என்று தேசிய, மாநிலக் கட்சிகளும், ஊடகங்களும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்கள் மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்கள் என இரட்டைப் பரபரப்புடன் இயங்குகின்றன. இந்த மாநிலங்களில் மாநிலக் கட்சிகளுடன் தேசியக் கட்சிகளும் சமமான பலத்துடன் போட்டியிடும் ஒடிசா மாநிலத் தேர்தல் சிறப்புக் கவனம் பெறுகிறது.
இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கனிம வளங்கள் நிறைந்த ஒடிசா மாநிலம் சுற்றுலா, கலை மற்றும் பண்பாடுகளுக்குப் பெயர் பெற்றது. பூரி ஜெகந்நாதர் ஆலயமும் கொனார்க் சிற்பங்களும் இங்குதான் உள்ளன. உலகின் இரண்டாவது பெரிய தடாகத்தைக் கொண்டுள்ள சிலிகா ஏரி இந்த மாநிலத்தில்தான் உள்ளது. புகழ் பெற்ற ஒடிசி நடனம் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தது. இந்தியாவிலேயே அதிகமான பழங்குடியினர் வாழும் மாநிலம். அறுபத்து இரண்டுக்கும் மேற்பட்ட பழங்குடி இன மக்கள் இம்மாநிலத்தில் வாழ்கிறார்கள். ஒடிசா மாநிலத்தின் பழைய பெயர் ஒரிசா. இதன் தலைநகரம் புவனேஷ்வர்.
இத்தனை பூகோளச் சிறப்புகளைக் கொண்ட ஒடிசா இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத பங்கு வகிக்கிறது. கிழக்குப் பகுதியில் உள்ள மாநிலங்களில் ஒடிசா மட்டுமே தமிழகத்துடன் குறிப்பிடும்படியான தொடர்பில் இருந்தது.
Add Comment